கோவையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் மர்மக் கும்பல் : பொதுமக்கள் அதிர்ச்சி

காந்திமாநகர் பூங்காவில் 4 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்.;

Update: 2025-09-24 02:37 GMT
கோவை காந்திமாநகர் மாநகராட்சி பூங்காவில் நேற்று முன்தினம் இரவு மர்மக் கும்பல் புகுந்து 4 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் நடந்த நிலையில், காவல் துறை கண்காணிப்பால் சில மாதங்களாக அமைதி நிலவியது. ஆனால் தற்போது மீண்டும் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News