கோவையில் இன்று பல பகுதிகளில் மின்தடை !

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்.;

Update: 2025-09-24 02:39 GMT
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. குனியமுத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகம் துணை மின்நிலையத்தின் கீழ் வரும் யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமயம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மயிலம்பட்டி துணை மின்நிலையத்தின் கீழ் கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்தடை அமல்படுத்தப்படும். இந்த இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம் அல்லது சில குறிப்பிட்ட இடங்களில் மின்தடை ரத்து செய்யப்படலாம் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News