புதுகை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (செப்.24) காலை 10 மணி முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேற்படிப்பு மேற்கொள்ள தயாராக இருக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை வழங்கி உடனடியாக கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.