புதுக்கோட்டை மாநகராட்சி பூங்கா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜயோக விநாயக ஆலயத்தில் 14 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு விழா துர்க்கை அம்மன் 108 போற்றி பாடலுடன் விழா இனிதே தொடங்கியது. கோவிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை செய்தனர். இங்குள்ள சிறுவர்கள் சிறுமியர்கள் பாடல்கள் பாடி கொலுவை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபட்டனர்.