அத்திக்கோட்டையில் கதண்டு கடித்து நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி
மன்னார்குடி அருகே கதண்டு கடித்து நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அத்திக்கோட்டை கிராமத்தில் வடக்கு தெருவில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற போது முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மனைவி லதா,அவரது மகன் சந்தோஷ், அதே தெருவை சேர்ந்த கோபால் அவரது மகன் சக்திவேல் ஆகியோரின் கதண்டுகள் கடித்துள்ளது இந்நிலையில் நான்கு பேரும் விற்கப்பட்டு உடனடியாக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.