ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் மகிழ்ச்சி – வானதி சீனிவாசன் பேட்டி !

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் மகிழ்ச்சி – மாநில அரசு அரசியல் பார்வையில்லாமல் செயல்பட வேண்டும்.;

Update: 2025-09-24 07:48 GMT
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் தீபாவளி காலத்தில் பெண்கள் புடவை உள்ளிட்ட ஜவுளி பொருட்களை குறைந்த விலையில் வாங்கி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றார். டி-ஷர்ட்டிலிருந்து புடவை வரை வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் பலனளிக்கிறது என்றும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனையே குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் கூறினார். அடுத்த கட்டமாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், டீ-காபி விலையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். வரி குறைப்பை பொதுமக்கள் உணர மாநில அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். இதை அரசியல் பார்வையில் பார்க்காமல், மக்களுக்கு நேரடியாக பயன் அடைய வழி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பா.ஜ.கவில் எந்தவித கோஷ்டி பூசலும் இல்லை; கூட்டணியை பலப்படுத்துவதே அனைவரின் நோக்கமாகும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Similar News