கோவை: மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் !
பெண்கள் சுயமாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.;
கோவையில் மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச தையல் பயிற்சி வகுப்புகளை வானதி சீனிவாசன் தொடங்கி வைத்து பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர் பேசினார்.