கோவை: தண்ணீர் இல்லா கழிப்பிடம் – பொதுமக்கள் சாலை மறியல் !
கோவை மணியக்காரன்பாளையத்தில் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமையால் சாலை மறியல் போராட்டம்.;
கோவை மாநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மணியக்காரன்பாளையம் 19-வது வார்டு, அம்மா உணவகம் அருகிலுள்ள பொது கழிப்பிடத்தில் கடந்த இரண்டு வாரமாக தண்ணீர் வினியோகம் இல்லாததால் மக்கள் அவதியடைந்தனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் விநியோகத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.