ஆலங்குடியில் நேற்று இரவு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்த கல்லாலங்குடி சேர்ந்த பாரதிதாசன்(23) என்ற இளைஞரை, திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.