ராமநாதபுரம் மத போதகர் மீது ஊர் பொதுமக்கள் புகார்

நகைக்கு வட்டியில்லா பணம் தருவதாக கூறி 150 பவுன் நகைகளை ஏமாற்றி தலைமறைவான இஸ்லாமிய மத போதகரை கண்டுபிடித்து நகைகளை மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு;

Update: 2025-09-25 02:25 GMT
ராமநாதபுரம் கீழகிடாரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமிய மத போதகர் கிராம மக்களிடம் பெற்ற 150 பவுன் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளதால் அவரை தேடி கண்டுபிடித்து நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழக்கிடாரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் தேனி மாவட்டம் சீளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அபுதாஹீர் என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமிய மத போதகராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அபுதாஹீர் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதி மக்களிடம் நகைக்கு வட்டி இல்லா கடன் தருவதாக கூறி அவர்களிடம் இருந்து நகைகளை வாங்கி கொண்டு பணம் கொடுத்து வந்துள்ளார். இதனை நம்பி கிழகிடாரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் சுமார் 150 பவுன் நகைகளை இஸ்லாமிய மத போதகர் அபுதாஹீரிடம் கொடுத்தது பணம் பெற்றுள்ளனர். மேலும் பலரும் தங்கள் கொடுத்த நகையை திருப்புவதற்காக பணம் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்ட இஸ்லாமிய மத போதகர் அபுதாஹீர் செப்டம்பர் ஒன்றாம் தேதி நகையை திருப்பி தருவதாக கூறிய நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமிய மத போதகர் பள்ளிவாசலில் இருந்து தவைமறைவாகியுள்ளார். அவரை தொடர்பு கொள்ள முடியாததால் நகையை இழந்த மக்கள் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷை நேரில் சந்தித்து இஸ்லாமிய மத போதகரை உடனடியாக கண்டுபிடித்து தங்களது நகைகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News