குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முழுமையாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்;

Update: 2025-09-25 04:05 GMT
காஞ்சிபுரம் ஐதர்பேட்டை தெருவில், புதிய குடிநீர் குழாய் இணைப்புக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. இதில், மின்கம்பம் அருகில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் உள்ளது. இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், மழையின்போது, பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில், கேபிளில் மின்கசிவு ஏற்படுவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முழுமையாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News