திருநெல்வேலி மாவட்டம் டோனாவூரில் அரசு உதவி பெறும் உவாக்கர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட ஜாதி மோதலில் அரிவாள் வெட்டு விழுந்து ஒரு மாணவனுக்கு ஆறு தையல் முதுகில் போடப்பட்டுள்ளது. தடுக்க வந்த மற்றொரு மாணவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.