கம்பம் நகராட்சி தலைவர் துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கூறி நகராட்சியை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் சில தினங்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு வழங்கினர். இந்நிலையில் கம்பம் நகராட்சி கமிஷனர் சம்பந்தப்பட்ட 22 கவுன்சிலர்களுக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் வரும் அக்.9.ல் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறும் என கடிதம் அனுப்பியுள்ளார்.