நரிமேட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மொபட்டில் மருப்பினி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்க டயரின் அடியில் விழுந்தார். இதில் அவர் உடல் மீது லாரி ஏறி இறங்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.