புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, விட்டமாபட்டி பகுதியில் அனுமதியின்றி கிராவல்மண் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் கனிமவளத்துறை அலுவலர் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் விட்டமாபட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து விராலிமலை போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.