புரட்டாசி மாத வியாழனை முன்னிட்டு, இன்றைய தினம் சிறப்பு அபிஷேகங்கள்!
நிகழ்வுகள்;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள இரண்டாவது குருஸ்தலமாக அழைக்கப்படும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு புரட்டாசி மாத வியாழனை முன்னிட்டு, இன்றைய தினம் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து சென்றனர்.