சிவ.வீ. மெய்யநாதன் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வுகள்;

Update: 2025-09-25 07:43 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கீழாத்தூர் பகுதியில் உள்ள ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்: மாணவர்களாகிய நீங்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லுகின்ற பொழுது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நம் பெற்றோர்கள் நம்மை மிகவும் நம்புகிறார்கள். தினமும் இரவு 8 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும்,நாம் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றால் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றார்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.

Similar News