கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஆறு பேர் கைது !

தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைத்து ரயிலைக் கவிழ்க்க முயன்ற கும்பல்.;

Update: 2025-09-25 07:53 GMT
கோவை சூர்யா நகர் பகுதியில் இருகூர்–சிங்காநல்லூர் ரயில் பாதையில் மரக்கட்டை வைத்து ரயிலை சேதப்படுத்த முயன்ற ஆறு பேர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுலகிருஷ்ணன், வினோத், சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டில் நாகராஜ், சேலத்தில் வேதவன் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்த ரயில்வே காவல்துறையினருக்கு மேலதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Similar News