புதுகை மன்னர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து நடத்திய கல்விக்கடன் மேளாவிற்கு கலெக்டர் மு.அருணா தலைமை வகித்தார்.முகாமில் 45 மாணவர்களுக்கு ரூ2.85 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்குவதற்கான ஆணைகள் காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் டிஆர்ஓ அ.கோ.ராஜராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.நந்தகுமார், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.