நெல்லை சந்திப்பு உடையார்பட்டி மேகலிங்கபுரம் ஸ்ரீ சிவசக்தி தசரா குழு நடத்தும் மகாகாளி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தசரா குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.