மூலனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்
மூலனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் தொடங்கி வைத்தார்;
மூலனூர் பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் துரை தமிழரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தெண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். இதில் பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில், பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் சசிகலா, வார்டு கவுன்சி லர்கள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்