அவசர சிகிச்சை துறை சார்பில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி

அவசர கால மருத்துவ உதவி தேவைப்படும் முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கு எந்த மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும், எந்த மாதிரியான முதலுதவி செய்யக்கூடாது என விரிவாக எடுத்துரைத்து கலந்துரையாடினார்.;

Update: 2025-09-25 16:19 GMT
திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் & அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று அவசர சிகிச்சை துறை சார்பில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி (TAEI Training ( BLS & EARLY TRAUMA MANAGEMENT) ன் முதலுதவி பயிற்சி குறித்து முதல்நிலை செயற்பாட்டாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அவசர சிகிச்சை துறை மருத்துவர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கு தேவைப்படும் உதவிகள், அவசர கால மருத்துவ உதவி தேவைப்படும் முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கு எந்த மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும், எந்த மாதிரியான முதலுதவி செய்யக்கூடாது என விரிவாக எடுத்துரைத்து கலந்துரையாடினார். இதில் பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி கிராம நிர்வாக உதவியாளர்கள் செங்குணம் அனிதா, குரும்பலூர் (தெ) சாந்தி, எளம்பலூர் பாலு, வேலூர் ஜான்சன், தன்னார்வலர்கள் செங்குணம் குமார் அய்யாவு, வேலூர் ராஜ்குமார் பங்கேற்றனர்‌ மேலும் திருச்சி, பெரம்பலூரை சேர்ந்த இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினர், மருத்துவமனை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Similar News