அரசு கல்லூரியில் தமிழ்துறையில் கருத்தரங்கம்
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் கருத்தரங்கம்;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தடங்கம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள தர்மபுரி அரசு கலைக் கல்லூரி தர்மபுரியில் நேற்று (செ.25) வியாழக்கிழமை தமிழ்த்துறையின் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தங்களது ஆய்வு கட்டுரைகளை வாசித்தனர். பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டினர். ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்று தங்களின் கட்டுரைகளின் பொருண்மைகளை எடுத்துரைத்தனர்