முழுத் தொகை செலுத்தியும் செல்போன் தராத நிதி நிறுவனம் உறவினர்களுடன் பெண் தர்ணா போராட்டம்

தாராபுரத்தில் முழுத் தொகை செலுத்தியும் செல்போன் தராததால் நிதி நிறுவனத்தில் உறவினர்களுடன் பெண் தர்ணா போராட்டம்;

Update: 2025-09-26 02:46 GMT
தாராபுரம் அருகே உள்ள அம்மாபட்டிைய சேர்ந்தவர் அர்ஜூனன். அவருடைய மனைவி பானுப்பிரியா. இவர், தாராபுரத்தில் உள்ள செல்போன் கடையில், மாதத்தவணைக்கு செல்போன் வாங்கினார். அதைத்தொடர்ந்து கடன் தவணையை செலுத்தினார். அதில் 2 தவணை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், அம்மாபெட்டி வந்து, அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை வாங்கி வந்த கதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த பெண் மீதமுள்ள முழு தொகையை செலுத்தி, செல்போனை கேட்டார். அப்போதுஅந்த செல்போனை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வேறு ஒருவருக்கு விற்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண், தனது உறவினர்களுடன் வந்து, தனியார் நிதி நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News