புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கமும் புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கமும் இணைந்து பி.வெல்.ஹாஸ்பிடல் மற்றும் அகர்வால் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுமார் 300 நபர்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை ஆலோசனை மற்றும் இரத்த பரிசோதனை செய்து பயன் பெற்றனர். நிகழ்வில் இரண்டு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.