திருமயம் பயணி காயம்: டிரைவர் கைது!

விபத்து செய்தி;

Update: 2025-09-26 03:26 GMT
அரிமளத்தில் இருந்து அறந்தாங்கிக்கு அரசு பஸ் சென்றுக்கொண்டிருந்தது. தேத்தாம்பட்டி அருகே சென்றபோது திடீரென பஸ்சின் டயர் வெடித்தது. அப்போது டயர் இருந்த பகுதியில் சீட்டில் அமர்ந்திருந்த கீழப்பனையூரை சேர்ந்த பயணி கவுசல்யா(22) என்பவர் காலில் மரப்பலகை குத்தியது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர் கே. புதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து பஸ் டிரைவர் ரமேஷ் (53) என்பவரை கைது செய்தனர்.

Similar News