காசாவில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து பேரணி

பாலஸ்தீனத்தில் நடைபெறும் போரை நிறுத்த கோரியும் காசாவில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரசார் பேகம்பூரில் மாபெரும் கண்டன பேரணி;

Update: 2025-09-26 03:50 GMT
பல ஆண்டு காலமாகவே பாலஸ்தீன இஸ்ரேல் மோதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறை மோதல் நடக்கும்பொழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. பாலஸ்தீன இஸ்ரேல் மோதலை தொடர்ந்து காசாவிலும் இனப்படுகொலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்தது போல தற்பொழுது உள்ள மத்திய பாஜக அரசும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரசார் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரசார் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீன காசாவில் மக்கள் இன படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் பேரணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திண்டுக்கல் திப்பு சுல்தான் மணிமண்டபத்தில் இருந்து பேகம்பூர் வரையில் பேரணியாக சென்றனர்.

Similar News