பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் ஏ.ஐ ஹேக்கத்தானில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் ஏ.ஐ ஹேக்கத்தானில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்;

Update: 2025-09-26 05:19 GMT
பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் ஏ.ஐ ஹேக்கத்தானில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர் சத்தி, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஏபிபி லிமிடெட் நிறுவனம் ஏபிபி ஆக்சிலரேட்டர் 2025 நிகழ்ச்சியை கோவையில் உள்ள கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டலத்தில் உள்ள 15 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. ஏபிபி நிறுவனம் ஏ.ஐ தரவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்தி புதுமையான தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கியது. போட்டி மூன்று முக்கிய தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது. இதில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் தினேஷ், முகமது அஃபீஃப், ராகுல் மற்றும் ஜிஸ்னு ஆகியோர் அடங்கிய குழு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவார்ந்த அலாய் ஆப்டிமைசன் என்ற தீர்விற்காக, தொழில்துறைக்கான சிறந்த கண்டுபிடிப்பு பிரிவில் 3ம் பரிசு பெற்றனர். இக்குழுவிற்கு ரூ. 84,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்களும், மேலும் ஏபிபி நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேரும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் பயிற்சி, அவர்கள் இறுதியாண்டில் தொழில் துறையோடு நேரடி அனுபவத்தை பெற உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பட விளக்கம் கோவையில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் 3ம் பரிசு பெற்ற மாணவர்கள்

Similar News