நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில் உழவர் சந்தை அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சல்மான், திவான், சமீம் பானு, ஷாகிரா சிரீன் ஆகியோர் செய்து இருந்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.