கண்டமனூர் போலீசார் நேற்று (செப்.25) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அம்பாசமுத்திரம் பகுதியில் கெங்குசாமி என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையிலிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கெங்குசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.