அரியகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
அரியகுளம் ஊராட்சியில் கோட்டாட்சியர் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.;
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம், அரியகுளத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் கோட்டாட்சியர் காயத்திரி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்தது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். மேலும், இத்திட்ட முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக இத்திட்ட முகாமில் சுமார் 30 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாமாறுதலுக்கான ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைக்கான அடையாள அட்டைகள், மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை கோட்டாட்சியர் வழங்கினார்கள். . இந்நிகழ்வுகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன்,தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபுராஜ் சேகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன் மாவட்ட பிரதிநிதி கோபாலனி மனோகரன் வர்த்தக அணி அமைப்பாளர் நிலவழகன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.