திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாஞ்சோலை பகுதியில் இன்று மாலை கனமழை பெய்தது. இவ்வாறு கன மழை பெய்ததால் அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.