ரெண்டு வருஷமாக தனது இடத்தை அளந்து காட்டுமாறு கோரிக்கை வைத்து அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் ஏமாற்றம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூலித் தொழிலாளி கோரிக்கை;

Update: 2025-09-26 12:29 GMT
பெரம்பலூர் அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இடத்தை அளந்து காட்டுமாறு போராடிவரும் கூலி தொழிலாளர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வசிக்கும் குலாம் ஹாதர் என்பவரின் மகன் சையது அபுதாஹிர் என்பவர் வட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார் அந்த புகார் மனுவில் கடந்த 2008 ஆம் ஆண்டு லப்பைகுடிக்காடு ஜமாலியா நகரில் சர்வே எண் 25/29 என்ற எண் கொண்ட இடத்தை ஏஹசானல்லா என்பவரிடம் 14 சென்ட் இடத்தை தனது தாயார் ஏஹமத்துன்னிஷா என்பவர் பெயரின் வாங்கியதாகவும் அந்த இடத்தின் அருகே கோவில் மானியமும் ஜமாலியா கமிட்டி இடமும் இருக்கிறது. அந்த இடத்தை சில ஆண்டுகளுக்கு முன் மூன்று முறை சர்வே செய்து அளந்து காட்டியதாகும்.அந்த இடத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்று கடந்த 12 -5 -2025 ஆம் தேதி அந்த இடத்திற்கு அளவு செய்ய வேண்டும் என்று பணம் கட்டி ரசீது பெற்றார் இந்த நிலையில் 18- 9 - 2025 அன்று தனது இடத்தை அளவு செய்ய வந்த சர்வேயர் தனது பட்டா மற்றும் பத்திரம் பார்க்காமல் சிலரின் பேச்சைக் கேட்டு தனக்கு சம்பந்தம் இல்லாத இடத்தை அளந்து காட்டியதாக குற்றம் சாட்டினார் இந்த நிலையில் 24- 9 -2025 மீண்டும் தனது இடத்தை அளந்து காட்ட வேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது இடத்தை அளந்து காட்ட கோரி புகார் மனு கொடுத்துள்ளேன் ஆனால் எனக்கு சரியான அளவுயினை அளந்து தரவில்லை மேற்கண்ட எனது இடத்தை அளந்து காட்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் மனு கொடுத்துள்ளார் மேற்கண்ட கூலித் தொழிலாளியின் இடத்தை முறையாக சரியாக அளந்து காட்டப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். .

Similar News