நாட்டு நலப்படுத்திட்ட சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் மு பழனிவேலன் முகாம் சிறப்புரை ஆற்றினார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சு.பரமசிவம் (முதுகலை) வி. ரமேஷ் (பட்டதாரி) வாழ்த்துரை வழங்கினார்கள்.;
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான நாட்டு நலப்படுத்திட்ட சிறப்பு முகாம் ஆனது 26 /09/ 2025 (வெள்ளிக்கிழமை) முதல்(02/10/2025) வியாழன் வரை பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் கிராமத்தில் துவக்க விழாவானது நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் V. சந்திரசேகர் தலைமை தாங்கினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் மு பழனிவேலன் முகாம் சிறப்புரை ஆற்றினார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சு.பரமசிவம் (முதுகலை) வி. ரமேஷ் (பட்டதாரி) வாழ்த்துரை வழங்கினார்கள். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜான் ராபின்சன் முகாம் விளக்க உரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் விளாமுத்தூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் சிறப்பு விருந்தினர்களால் நடப்பட்டது. நிகழ்வில் உதவி திட்ட அலுவலர் விஜயகுமார் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவேறியது