துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்
காங்கேயத்தில் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
காங்கேயம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். போனஸ் வழங்கக்கோரியும், சம்பளம் உயர்த்தி தர வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, துப்புரவு பணியாளர்களின் சங்கத் தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.