தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் பகுதியில் 2 நாள்களாக பெய்துவந்த மிதமான சாரல் மழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நேற்று முன் தினம் ஐந்தருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று முற்பகலில் நீா்வரத்து சீரானதால் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. இதனால் இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.