சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு;

Update: 2025-09-27 01:15 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழச் சுரண்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கோ.கனகராஜ் (67). சுமைதூக்கும் தொழிலாளி சோ்ந்தமரத்தில் இருந்து சுமை ஆட்டோவில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சுரண்டையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். வாகனத்தை முகேஷ் ( 20) ஓட்டி வந்த ஆட்டோ குலையநேரி அருகே வந்தபோது எதிா்பாராத விதமாக வாகனம் இடது பக்கம் கவிழ்ந்ததில் கனகராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News