கலைஞர் நூலகம் மூன்றாம் ஆண்டு விழா

செட்டிக்கரை பகுதியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் கலைஞர் நூலகம் மூன்றாம் ஆண்டு விழா;

Update: 2025-09-27 02:07 GMT
தர்மபுரி செட்டிக்கரை பகுதியில் கலைஞர் நூலகத்தை மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மு.அமைச்சர் பழனியப்பன் நூலகத்தை நேற்று மாலை பார்வையிட்டனர் இதில் கலைஞர் நூலகத்தில் படித்த மாணவ மாணவிகள். டி என் பி எஸ் சி தேர்வு எழுதி வெற்றி பெற்று ஏழு நபர்கள் அரசு வேலைக்கு சென்றுள்ளனர் இவர்களை தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் அவை தலைவர். மனோகரன் தலைமை வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் மாது. சத்திவேல். பிரபு ராஜசேகர் இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர சிவகுரு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர். வழக்கறிஞர் வீரமணி பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வெற்றிவேல். வர்த்தக அணி. மேயர் முனுசாமி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

Similar News