கோவை துடியலூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம் !
கோவையில் தெருநாய்களுக்கு பெருமளவில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்.;
கோவை துடியலூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், எம்.பி. கணபதி ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் மொத்தம் 1,11,074 நாய்களுக்கு 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் சுமார் 200 நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 2 நாய் பிடிக்கும் வாகனங்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு ரேபிஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.