பெரியகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று (செப்.27) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது எ.புதுக்கோட்டை பகுதியில் பிரசாத், குபேந்திரபிரபு, சக்திவேல் ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.