மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி
திண்டுக்கல் வித்யா பார்த்தி பள்ளியில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது;
திண்டுக்கல்லில் திண்டுக்கல் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்றது. தனியார் பள்ளி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி நடைப்பயிற்சி சங்க தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டஸசங்க புரவலர் சுந்தர்ராஜன் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் ரோடு ரேஸ், ரிங் ரேஸ், ரோலர் ஸ்கேட்டிங், ஹாக்கி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் 6,8,10,12,14,16 வயது பிரிவுகளிலும், ஹாக்கி போட்டியில் 12,15,17 வயது பிரிவு ஆண் மற்றும் பெண் என தனித்தனியாக நடைபெற்றது. மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.