மாநகராட்சி கூட்டம் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

தூத்துக்குடி மாநகராட்சியில், கடந்த காலத்தை போல் அதிகனமழை பெய்தாலும், தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் இதனை மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். ;

Update: 2025-09-29 13:53 GMT
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மழைக்காலத்திற்கான முன்னேற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அன்னம்மாள் கல்லூரி மற்றும் முள்ளக்காடு வழியாக மழைநீர் கடலுக்குச் செல்லும் வகையில் வடிகால் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோரம்பள்ளம் குளம் வழியாக முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகள் கடலுடன் இணைக்கும் 12 கி.மீ நீள வடிகால் சீரமைப்பு நடைபெற்று வருவதாகவும் இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலத்தை போல் அதிகனமழை பெய்தாலும், தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டுகளில் மொத்தம் 21,759 தெருவிளக்குகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றை பராமரிக்க 26 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 420 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருவதோடு, அடுத்த கட்டமாக மேலும் 400 சாலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் மாநகராட்சி பகுதியில் 206 பூங்காக்கள் செயல்பாட்டிற்கு வரும் வகையில் புதுப்பிப்பு மற்றும் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சிறிய குடியிருப்பு பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பனிக்குழு தலைவர் கீதா முருகேசன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, திமுக மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், முத்துவேல், ரெங்கசாமி, ஜெயா ஜாக்குலின் செல்வகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, வைதேகி, பவானி, ரெக்சீலின், அந்தோணி மார்ச்சில், அதிமுக மாமன்ற கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், எடிண்டா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News