போடியை சேர்ந்தவர் கோபால் ராஜ் (66). இவர் நேற்று முன்தினம் தேனியில் உள்ள கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு சாலையை கடந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக மதன் குமார் என்பவர் ஓட்டி வந்த பைக் கோபால் ராஜ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு (செப்.28) பதிவு.