பேருந்து நிலையத்தில் குண்டு வீசியவர் கைது

மதுரை சோழவந்தான் பேருந்து நிலையத்தில் குண்டு வீசி பரபரப்பு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2025-09-30 12:53 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நேற்று (செப் .30) காலை மண்ணெண்ணெய் நெடியுடன் ஒரு பாட்டில் சிதறிக்கிடந்தது. இது குறித்து விஏஓ திலீபன் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தியதில் சோழவந்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ்(22) மற்றும் சங்கங்கோட்டை செல்வம் மகன் பிரவீன் (19) ஆகியோர், நேற்று முன்தினம் இரவு போதையில் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி, அங்குள்ள கடைகளின் மீது வீசியது தெரியவந்ததால் விக்னேஷை கைது செய்யப்பட்டார் .தலைமறைவான பிரவீனை போலீசார் தேடி வருகிறார்.

Similar News