ராமநாதபுரம் அகோரி இடம் பொதுமக்கள் ஆசீர்வாதம் பெற்றனர்
திருவாடானைக்கு காசியில் இருந்து வந்த அகோரி இட ம் பொதுமக்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.;
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உத்திர பிரதேசம் மாநிலம், காசியை சேர்ந்த அசோக்கிரி மகராஜ் அகோரி தனது சகாக்களுடன் ராமேஸ்வரம் செல்வதற்காக இவ்வழியாக வந்துள்ளார். அப்போது இப்பகுதி மக்களை சந்தித்து ஆசீர்வாதம் செய்து விபூதி பூசினார். தனது உடல் முழுவதும் அவர் விபூதி பூசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராமேஸ்வரத்தில் மூன்று நாள் தங்கியிருந்து யாகம் வளர்த்து வழிபட போவதாகவும் தெரிவித்தனர்