சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அப்பள்ளியில் பணிபுரியும் சிலர் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜா, தூய்மைப்பணியாளர் விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தேனி மாவட்ட சி.இ.ஓ. உஷா உத்தரவிட்டுள்ளார்.