கரூர் துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி.

கரூர் துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி.;

Update: 2025-10-02 10:46 GMT
கரூர் துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி. கரூரில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தும் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று கரூருக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் முன்பு மோட்ச தீபம் ஏற்றி வைத்து இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட மாவட்ட மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Similar News