சாலை விபத்தில் சமையல் தொழிலாளி பலி
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சமையல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்;
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிபட்டியை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி ராமகிருஷ்ணன் மகன் கணேசன்(23). நேற்றிரவு (அக்.1)மணப்பட்டியில் ஆயுத பூஜைக்காக சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்பினார். கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் சாலையை நடந்து கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் சாலையில் தலையில் அடிபட்டு சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீசார் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.