கட்டிட தொழிலாளி மர்ம மரணம்.மறியல். பரபரப்பு.
மதுரை உசிலம்பட்டி அருகே கட்டிட தொழிலாளி மர்ம மரணத்தால் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி கட்டிட தொழிலாளி கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வரும் நிலையில் தினசரி உசிலம்பட்டிக்கு வேலைக்கு வந்துவிட்டு வீடு திரும்பாத நிலையில் அதே ஊரில் மாற்று சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் சுப்பிரமணி இறந்து கிடந்துள்ளார்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை போலீசார் உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.