முன்னாள் அமைச்சர் தலைமையில் விவசாயிகள் போராட்டம்.

மதுரை திருமங்கலம் அருகே உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்;

Update: 2025-10-02 11:17 GMT
மதுரை மாவட்டம், கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வையூரில் உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் பச்சைத் துண்டு அணிந்து பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்க கூடாது என்றும்,கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். உதயகுமார் கூறியதாவது திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும் வகையில் கனிம வளக் கொள்கைகள் நடைபெற்று வருகிறது .வேளாண் விளை நிலங்களும், நீர் நிலைகளும், நீர் வழித்தடங்களும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Similar News